/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
புதிய கலெக்டர் அலுவலக கட்டுமான பணி அக்.,30க்குள் முழுமையடைய நடவடிக்கை: அமைச்சர் வேலு தகவல்
/
புதிய கலெக்டர் அலுவலக கட்டுமான பணி அக்.,30க்குள் முழுமையடைய நடவடிக்கை: அமைச்சர் வேலு தகவல்
புதிய கலெக்டர் அலுவலக கட்டுமான பணி அக்.,30க்குள் முழுமையடைய நடவடிக்கை: அமைச்சர் வேலு தகவல்
புதிய கலெக்டர் அலுவலக கட்டுமான பணி அக்.,30க்குள் முழுமையடைய நடவடிக்கை: அமைச்சர் வேலு தகவல்
ADDED : செப் 05, 2025 07:42 AM

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி புதிய கலெக்டர் அலுவலக கட்டுமான பணிகள் அக்., 30க்குள் பணிகளை முழுமையாக நிறைவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி அடுத்த வீரசோழபுரத்தில் 139.41 கோடி மதிப்பில் புதிய கலெக்டர் அலுவலகம் 8 தளங்களை கொண்டு கட்டப்பட்டு வருகிறது. கலெக்டர் அலுவலக கட்டுமான பணிகளை அமைச்சர் வேலு நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, பொதுப்பணித்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் மங்கத் ராம் சர்மா, கலெக்டர் பிரசாந்த், மலையரசன் எம்.பி., வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., ஆகியோர் உடனிருந்தனர்.
பின்னர் அமைச்சர் வேலு நிருபர்களிடம் கூறியதாவது;
கள்ளக்குறிச்சி புதிய கலெக்டர் அலுவலக கட்டுமான பணிகள் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. கட்டுமான பணிகள் உரிய கண்காணிப்புடன் தரமாகவும், விரைவாகவும் சரியான திட்ட அளவுகளின் படி நடந்து வருகிறது. இதுவரை 85 சதவீதம் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. மீதமுள்ள பணியில் டைல்ஸ் ஒட்டுதல், மாவட்ட அளவிலான துறை அலுவலர்கள் அறை கட்டுமான பணிகள், வெளிப்புற பணிகள், வாகன நிறுத்தமிடம், குடிநீர் வசதி உள்ளிட்டவை நடக்கிறது.
கட்டடத்தில் பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி எளிதில் சென்று வரும் வகையில் லிப்ட் வசதிகள் தனி தனியாக அமைக்கப்பட்டுள்ளன. கட்டடத்தின் எஞ்சியுள்ள பணிகளை விரைவாக மேற்கொண்டு வரும் அக்., 30க்குள் பணிகளை முழுமையாக நிறைவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பணிகள் முழுமையாக நிறைவு பெற்றவுடன் முதல்வர் ஸ்டாலின் நேரடியாக கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு வருகை தந்து கலெக்டர் அலுவலகத்தை திறந்து வைப்பார்.
மேலும் புதிய கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைக்கவும், செங்கல்பட்டு - உளுந்துார்பேட்டை 4 வழிச்சாலையை 6 வழிச்சாலையாக மாற்ற புதுடில்லி சென்று கோரிக்கை அளிக்கப்பட்டுள்ளது என்று கூறினார். அப்போது டி.ஆர்.ஓ., ஜீவா, சப் கலெக்டர் ஆனந்தகுமார்சிங், நகர சேர்மன் சுப்ராயலு, மாவட்ட சேர்மன் புவனேஸ்வரி பெருமாள், ஒன்றிய சேர்மன் தாமோதிரன், துணை சேர்மன்கள் நெடுஞ்செழியன், அன்புமணிமாறன், அட்மா குழு தலைவர் அண்ணாதுரை ஆகியோர் உடனிருந்தனர்.