/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
புதிய ஊராட்சி கட்டடம் கட்டும் பணிகள் துவக்கம்
/
புதிய ஊராட்சி கட்டடம் கட்டும் பணிகள் துவக்கம்
ADDED : ஏப் 05, 2025 04:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னசேலம்: சின்னசேலம் அருகில், புதிய ஊராட்சி மன்ற கட்டடம் கட்டும் பணி துவங்கியது.
சின்னசேலம் அடுத்த தெங்கியாநத்தம் ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், ரூ.30 லட்சம் மதிப்பீட்டில், புதிதாக ஊராட்சி மன்ற கட்டடம் கட்ட திட்டமிடப்பட்டது.
இந்த கட்டடம் அமைப்பதற்கான பணிகள் நேற்று துவங்கின. துணை சேர்மன் அன்புமணிமாறன் தலைமை தாங்கி பணிகளை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் ஊராட்சித் தலைவர் ராமமூர்த்தி, கட்சி நிர்வாகிகள் திராவிடமணி, ஆற்றலரசன், கிளைச் செயலாளர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.