/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
உதவி ஆணையர் அலுவலகம் கட்டுமான பணி கிடப்பில்
/
உதவி ஆணையர் அலுவலகம் கட்டுமான பணி கிடப்பில்
ADDED : மார் 20, 2025 05:19 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் இந்து சமய அறநிலையத்துறை மாவட்ட உதவி ஆணையர் அலுவலகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டி ஓராண்டாகியும் பணிகள் துவக்காமல் இருப்பது இப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.
கள்ளக்குறிச்சியில் இந்து சமய அறநிலையத்துறை மாவட்ட உதவி ஆணையர் அலுவலகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா, கடந்த 2024 ம் ஆண்டு பிப்., மாதம் நடந்தது. எம்.ஆர்.என்., நகரில் பெருமாள் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் ரூ.1.50 கோடி மதிப்பில் திட்டம் தயாரிக்கப்பட்டது.
பின் அறநிலையத்துறை உதவி ஆணையர் சிவாகரன் தலைமையில், ஆய்வாளர் சத்தியவாணி முன்னிலையில் கட்டுமான பணிகளைத் தொடங்க பூமி பூஜை நடத்தி, அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால் அதற்கு பிறகு ஓராண்டு ஆகியும், இதுவரை எந்த வித பணிகளும் அங்கு துவங்கப்படாமல் கிடப்பில் போட்டுள்ளனர்.