/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அவசர கதியில் கட்டுமான பணி; உறுதித் தன்மை கேள்விக்குறி
/
அவசர கதியில் கட்டுமான பணி; உறுதித் தன்மை கேள்விக்குறி
அவசர கதியில் கட்டுமான பணி; உறுதித் தன்மை கேள்விக்குறி
அவசர கதியில் கட்டுமான பணி; உறுதித் தன்மை கேள்விக்குறி
ADDED : ஏப் 15, 2025 06:36 AM
கள்ளக்குறிச்சி புதிய கலெக்டர் அலுவலக கட்டுமான பணிகளை கடந்த 12ம் தேதி அமைச்சர் வேலு ஆய்வு செய்து, செப்., மாதம் பெருந்திட்டவளாகம் திறக்கப்படும் என அறிவித்தார். தற்போதைய நிலையில் கலெக்டர் அலுவலகம் 8 தளங்களும் சுற்றுச்சுவர் இன்றி பில்லர் மட்டுமே அமைக்கப்பட்ட நிலையில் எலும்பு கூடு போல் காட்சியளிக்கிறது.
இனிதான் சுவர் அமைத்து உட்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். இப்பணிகளை முடிக்க நான்கரை மாத கால அளவு என்பது மிக குறைவானதாகவே உள்ளது. சமீபகாலமாக அரசு சார்ந்த கட்டுமான பணிகள் தரமின்றி உள்ளது.
குறிப்பாக, கடந்த டிச., மாதம் பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் தண்டராம்பட்டு அருகே ரூ. 15.90 மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட மேம்பாலம் திறக்கப்பட்ட 3 மாதத்தில் முற்றிலும் சேதமானது. சமீபத்தில் பகண்டை கூட்டு ரோட்டில் பி.டி.ஓ., அலுவலகம் எதிரில் கட்டப்பட்ட நிழற்குடை கட்டடம் கட்டுமான பணியின் போது சரிந்து விழுந்து சேதமானது.
இந்நிலையில் கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தையும் அவசர கதியில் கட்டி முடிக்க வேண்டிய அவசியம் என்ன பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். ஓட்டுக்களை குறி வைத்து அவசரகதியில் மேற்கொள்ளப்படும் பணிகள் கலெக்டர் அலுவலக கட்டுமானத்தின் உறுதித் தன்மை கேள்விக்குறியாகி விடும். எனவே, கட்டுமான பணிகள் தரமாக இருக்க வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.