ADDED : மார் 12, 2026 05:34 AM
அ நிறம் | அளவு
கள்ளக்குறிச்சி: உளுந்துார்பேட்டை அருகே மனைவி திட்டியதால் மனமுடைந்த கணவன் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
உளுந்துார்பேட்டை அடுத்த கூவாகத்தை சேர்ந்தவர் நரசிங்கம் மகன் செல்வம், 45; இவர், கட்டட தொழிலாளி. சென்னையில் வேலை செய்த செல்வம், உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சிக்காக சொந்த ஊருக்கு வந்தார். கடந்த 10ம் தேதி அதிகளவு மது அருந்தினார். இதை இவரது மனைவி காமாட்சி கண்டித்தார். இதனால் மனமுடைந்த செல்வம் நேற்று முன்தினம் இரவு வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்த திருநாவலுார் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, செல்வத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
