/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கட்டுமான பணிகள்:கலெக்டர் ஆய்வு
/
கட்டுமான பணிகள்:கலெக்டர் ஆய்வு
ADDED : மார் 27, 2025 04:44 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் புதிய கலெக்டர் அலுவலக கட்டுமான பணிகளை கலெக்டர் பிரசாந்த் ஆய்வு செய்தார்.
கள்ளக்குறிச்சி அடுத்த வீரசோழபுரத்தில், 35.18 ஏக்கர் பரப்பளவில் ரூ.139.41 கோடி மதிப்பில், அனைத்து நிர்வாக வசதிகளுடன் புதிய கலெக்டர் அலுவலக கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.
தரை தளத்தில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், பத்திரிக்கையாளர் அறை, மாவட்ட கருவூலம், முதல் தளத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, தேர்தல் அலுவலகம், திட்ட இயக்குநர் அலுவலகம், வருவாய் அலுவலகங்கள், இரண்டாம் தளத்தில் டி.ஆர்.ஓ., அலுவலகம், ஆதிதிராவிடர் நல வாரியம், மாவட்ட வழங்கல் அலுவலகங்கள் என, 8 தளங்களில் பல்வேறு அலுவலக அறைகள் கட்டப்பட உள்ளன.
இந்நிலையில் இந்த கட்டுமான பணிகளை கலெக்டர் பிரசாந்த் ஆய்வு செய்தார்.
உரிய விதிமுறைகளின் படி பணிகள் நடப்பதை முறையாக கண்காணிக்கவும், குறிப்பிட்ட காலத்திற்குள் கட்டி முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின் போது, பொதுப்பணித்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.