/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பல்நோக்கு மருத்துவ முகாம் கள்ளக்குறிச்சியில் ஆலோசனை
/
பல்நோக்கு மருத்துவ முகாம் கள்ளக்குறிச்சியில் ஆலோசனை
பல்நோக்கு மருத்துவ முகாம் கள்ளக்குறிச்சியில் ஆலோசனை
பல்நோக்கு மருத்துவ முகாம் கள்ளக்குறிச்சியில் ஆலோசனை
ADDED : ஜூலை 19, 2025 02:47 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் பல்நோக்கு மருத்துவ முகாம் நடத்துவது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடந்தது.
தமிழ்நாடு முழுதும் நலம் காக்கும் ஸ்டாலின் பல்நோக்கு மருத்துவ முகாம் விரைவில் துவங்கப்பட உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மருத்துவ முகாம் நடத்துவது தொடர்பாக துறை வாரியான நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் மாவட்டத்தில் உள்ள 9 வட்டாரங்களில் ஒரு வட்டாரத்திற்கு 3 வீதம் 27 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டது.
முகாமினை சிறப்பாக நடத்தும் வகையில் அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. டி.ஆர்.ஓ., ஜீவா, மாவட்ட சுகாதார அலுவலர் ராஜா உட்பட அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.