/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மழைக்கால பள்ளி பராமரிப்பு குறித்து சி.இ.ஓ., தலைமையில் ஆலோசனை
/
மழைக்கால பள்ளி பராமரிப்பு குறித்து சி.இ.ஓ., தலைமையில் ஆலோசனை
மழைக்கால பள்ளி பராமரிப்பு குறித்து சி.இ.ஓ., தலைமையில் ஆலோசனை
மழைக்கால பள்ளி பராமரிப்பு குறித்து சி.இ.ஓ., தலைமையில் ஆலோசனை
ADDED : அக் 23, 2024 06:35 AM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட கல்வி துறை சார்பில் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டம்நடந்தது.
கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பள்ளியில் நடந்த கூட்டத்திற்கு சி.இ.ஓ., கார்த்திகா தலைமை தாங்கினார்.டி.இ.ஓ., ரேணுகோபால், உதவி திட்ட அலுவலர் பழனியாப்பிள்ளை, சி.இ.ஓ.,வின் நேர்முக உதவியாளர்கள்தண்டபாணி, செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில்மாவட்ட அரசு பள்ளிகளில்எதிர்வரும் மழைக்காலத்தில் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து சி.இ.ஓ., எடுத்து கூறினார்.தொடர்ந்து பள்ளி வளாகங்களில் இடிக்கப்பட்ட வேண்டிய கட்டடங்கள் இருப்பின் உடன் இடிக்கவும், காலாண்டுதேர்வு விடுமுறை முடிந்து பள்ளி திறப்பதற்கு முன் பள்ளி வளாகம் சுத்தம் செய்திடவும், பட்டுபோன மரங்கள்இருப்பின் அவைகளை அகற்றவும், பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்காமல் இருப்பதை உறுதி செய்திடவும்வலியுறுத்தினர்.
மேலும் மாணவர்கள் பள்ளிகளுக்கு தொடர்ந்து 100 சதவீதம் வருகை புரிவதை நடைமுறைப்படுத்த வேண்டும்.மாணவர்களுக்கு படிக்கும் பள்ளிகளிலேயே ஆதார் புதுப்பித்தல், புதியதாக எடுத்தல் மற்றும் அஞ்சலகசேமிப்பு வங்கி கணக்கு துவங்குதல். அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு தமிழ் புதல்வன் மற்றும்மாணவிகளுக்கு புதுமை பெண் திட்டத்திற்கு பதிவு செய்யப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு இணைய தளத்தில்அப்டேட் செய்யவும் அறிவுறுத்தப்பட்டது.