/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
'காவல் உதவி' செயலி குறித்து ஆலோசனை கூட்டம்
/
'காவல் உதவி' செயலி குறித்து ஆலோசனை கூட்டம்
ADDED : ஆக 20, 2025 10:48 PM

கள்ளக்குறிச்சி, ; கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி., அலுவலகத்தில், 'காவல் உதவி' செயலி குறித்து மொபைல்போன் விற்பனையாளர்கள் மற்றும் பழுதுபார்ப்போர் சங்கத்தினருடன் ஆலோசனை கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் கூடுதல் ஏடி.எஸ்.பி., திருமால் தலைமை தாங்கி பேசியதாவது; பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்காக 'காவல் உதவி' என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லுாரி மாணவிகள், பெண்கள் தங்களது மொபைல்போனில் இந்த செயலியை கட்டாயம் பதிவிறக்கம் செய்ய வேண்டும். செயலியில் குடும்பத்தினர், உறவினர் என 3 நபர்களின் பெயர், மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டும்.
மொபைலில் நேரடியாக புகார் தெரிவிக்க 'டயல் 100' வசதி உள்ளது. அவசர உதவிக்கு தொடர்பு கொள்ளும் போது, செயலி பயன்படுத்தும் நபரின் விவரம், அவர்களின் இருப்பிட விபரம், உடனடியாக கேமிரா ஆன் செய்யப்பட்டு, சம்பவ இடத்தில், 15 வினாடி வீடியோ பதிவாகி உடனடியாக போலீசாருக்கு செல்லும். தொடர்ந்து, போலீசார் உங்களை தொடர்பு கொள்வர். 'சைபர் கிரைம்' தொடர்பாக போலீஸ் நிலையங்களுக்கு செல்லாமல், செயலி வழியாகவே புகார் தெரிவிக்கலாம். போக்குவரத்து விதி மீறல் தொடர்பாக, போலீசார் வழக்கு பதிவு செய்தால், அதற்கான அபராதத்தை செயலி வழியாக செலுத்தலாம்.
எனவே, புதிதாக மொபைல் வாங்க வருபவர்கள், பழுது பார்க்க வருபவர்களுக்கு இந்த செயலியின் அவசியத்தை கூறி, பதிவிறக்கம் செய்ய பரிந்துரைக்குமாறு கூறினார்.
கூட்டத்தில் டி.எஸ்.பி., தங்கவேல், இன்ஸ்பெக்டர் ராபின்சன் மற்றும் போலீசார் மொபைல்போன் விற்பனையாளர்கள் மற்றும் பழுது பார்ப்போர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.