ADDED : மார் 16, 2026 03:27 AM
அ நிறம் | அளவு
சங்கராபுரம்: சங்கராபுரத்தில் சட்டசபை தேர்தலையொட்டி மண்டல அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
சங்கராபுரம் தாலுகா அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, சட்டசபை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சிராஜூதின், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வைரக்கண்ணன், வாசுதேவன் முன்னிலை வகித்தனர். தேர்தல் தாசில்தார் கோதண்டராமன் வரவேற்றார்.
கூட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். பாதுகாப்பாக ஓட்டுப்பதிவு இயந்திரங்களை எடுத்துச் செல்ல வேண்டும். தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.
