/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
இணைய வழியில் பட்டா மாற்றம் பிழைகளை குறைக்க கலந்தாய்வு
/
இணைய வழியில் பட்டா மாற்றம் பிழைகளை குறைக்க கலந்தாய்வு
இணைய வழியில் பட்டா மாற்றம் பிழைகளை குறைக்க கலந்தாய்வு
இணைய வழியில் பட்டா மாற்றம் பிழைகளை குறைக்க கலந்தாய்வு
ADDED : மார் 25, 2025 09:33 PM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் இணைய வழியில் பட்டா மாற்றம் பதிவேற்றம் செய்யும்போது ஏற்படும் பிழைகளை குறைப்பது தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். பொதுமக்கள் தாங்கள் வாங்கும் இடத்திற்கு பத்திரப்பதிவு செய்து, பட்டா மாற்றத்திற்காக இணையவழியில் விண்ணப்பிக்கும் போது ஏற்படும் பிழைகளால் அதிகளவு விண்ணப்பங்கள் தள்ளுபடி ஆகிறது.
இதை குறைப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து பத்திரப்பதிவு மற்றும் வருவாய்த்துறை அலுவலர்களுடன் கலெக்டர் பிரசாந்த் கலந்துரையாடினார்.
மேலும், பத்திரப்பதிவு செய்யும்போது ஏற்படும் பிழை, நில அளவை பணி மேற்கொள்ளும் போது ஏற்படும் பிழைகள் குறித்து கேட்டறிந்தார்.
தொடர்ந்து, பிழைகளை குறைப்பதற்கான வழிமுறைகள், அரசு விதிமுறைக்குட்பட்டு பத்திரப்பதிவிற்கு முறையாக பட்டா மாற்றம் வழங்க அறிவுரை வழங்கப்பட்டது.
கூட்டத்தில் டி.ஆர்.ஓ., ஜீவா, மாவட்ட பதிவாளர் ரூபியாபேகம், சார்பதிவாளர்கள், நில அளவர்கள் கலந்து கொண்டனர்.