
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: உளுந்துார்பேட்டை தொகுதி பா.ஜ., சக்திகேந்திரா பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் கெடிலத்தில் நடந்தது.
மாவட்ட தலைவர் அருள் தலைமை தாங்கினார். திருநாவலுார் கிழக்கு ஒன்றிய தலைவர் பாலமுருகன் வரவேற்றார். பாராளுமன்ற அமைப்பாளர்கள் ராஜேந்திரன், குணாளன் சிறப்புரையாற்றினர்.
உளுந்துார்பேட்டை தொகுதி இணை அமைப்பாளர் கஜேந்திரன், இணை பொறுப்பாளர் பாண்டியராஜ், தொகுதி பொறுப்பாளர்கள் தியாகராஜன், முருகன், மாவட்ட துணைத் தலைவர் சரவணன், மாவட்ட செயலாளர்கள் ரமேஷ், தமிழ்செல்வி, ஒன்றிய தலைவர்கள் காந்தி, சுரேஷ், கதிரவன், வெங்கடேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.
திருநாவலுார் மேற்கு ஒன்றிய தலைவர் வீரபாண்டியன் நன்றி கூறினார்.