நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னசேலம்: சின்னசேலத்தில், வாசவி, வனிதா கிளப் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பாலமுருகன், பொருளாளர் சதிஷ்குமார் தலைமை தாங்கினர். மாவட்ட நிர்வாகிகள் தண்டபாணி, மாயகிருஷ்ணன், காளிதாஸ் முன்னிலை வகித்தனர். பொருளாளர் சரவணன் வரவேற்றார்.
கூட்டத்தில், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாசவி சங்கத் தலைவர் ஜெய்கணேஷ், செயலாளர் ஜெயக்குமார் பரிசு வழங்கினர். நகர ஆர்ய வைசிய சமூகத்தினர் பங்கேற்றனர். சத்யா ஜெய்கணேஷ் நன்றி கூறினார்.