ADDED : மார் 15, 2024 11:25 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில், நுகர்வோர் தின உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடந்தது.
நுகர்வோர் தினத்தையொட்டி நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில், நுகர்வோர் கடமை, பொறுப்பு குறித்து உறுதிமொழியேற்கப்பட்டது. நிகழ்ச்சியில், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சையத் ஹமீது, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சங்கர் உட்பட பலர் பங்கேற்றனர்.

