/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
நுகர்வோர் பாதுகாப்பு மையம் ஆர்ப்பாட்டம்
/
நுகர்வோர் பாதுகாப்பு மையம் ஆர்ப்பாட்டம்
ADDED : ஏப் 25, 2025 05:27 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில், கலெக்டர் அலுவலகம் முன், மக்கள் உரிமை நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
நரசிம்மபாரதி, கவுதமி தலைமை தாங்கினர். மணிமேகலை, மல்லிகா முன்னிலை வகித்தனர்.
பொது செயலாளர் செல்வராஜ், மாநில தலைவர் ரமேஷ், பொது செயலாளர் கல்யாணசுந்தரம், பொருளாளர் குமார், அமைப்பு செயலாளர் ஜெயப்பிரகாஷ் ஆகியோர் கோரிக்கை குறித்து பேசினர்.
இதில் திருநாவலுார் ஜலகண்டேஸ்வரர் கோவில் நிலத்தில் பல ஆண்டுகளாக குடியிருந்து வருபவர்களை அப்புறப்படுத்துவதை கைவிட வேண்டும். தொடர்ந்து அந்த நிலத்திலேயே குடியிருக்க அனுமதி வழங்க வேண்டும். தரை வாடகை என்று அளவுக்கு அதிகமான தொகையை வசூலிப்பதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன.

