/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
நுகர்வோர் பாதுகாப்பு மையம் கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம்
/
நுகர்வோர் பாதுகாப்பு மையம் கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம்
நுகர்வோர் பாதுகாப்பு மையம் கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம்
நுகர்வோர் பாதுகாப்பு மையம் கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 05, 2024 10:31 PM

கள்ளக்குறிச்சி, : கள்ளக்குறிச்சியில் மக்கள் உரிமை நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாநில தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். பொருளாளர் குமார், துணை தலைவர் சதிஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் பொதுச் செயலாளர் செல்வராஜ், அமைப்பு செயலாளர் ஜெயபிரகாஷ், செயற்குழு உறுப்பினர் கல்யாணசுந்தரம், சக்திவேல், துணை செயலாளர் பன்னீர்செல்வம், செயற்குழு உறுப்பினர்கள் காமராஜ், சேகர், ஆறுமுகம் உள்ளிட்டோர் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
இதில் கள்ளக்குறிச்சி - சின்னசேலம் ரயில் திட்ட பணிகளை விரைவுப்படுத்த வேண்டும், ஏற்கனவே திட்டமிட்டபடி கள்ளக்குறிச்சி நகரில் ரயில் நிலையம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். செயற்குழு உறுப்பினர் கோவிந்தசாமி நன்றி கூறினார்.