/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தொடர் மணல் கடத்தலால் நிலத்தடி நீர் பாதிக்கும் அபாயம்
/
தொடர் மணல் கடத்தலால் நிலத்தடி நீர் பாதிக்கும் அபாயம்
தொடர் மணல் கடத்தலால் நிலத்தடி நீர் பாதிக்கும் அபாயம்
தொடர் மணல் கடத்தலால் நிலத்தடி நீர் பாதிக்கும் அபாயம்
ADDED : நவ 12, 2025 03:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே தொடர் மணல் கடத்தலை தடுக்க பொது மக்கள கோரிக்கை விடுத்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த கல்வராயன்மலையை சேர்ந்த புதுபாலப்பட்டு, தும்பை, பாச்சேரி, மோட்டாம்பட்டி ஆகிய கிராமங்களில் தொடர் மழையால் ஆறுகளில் மணல் அதிக அளவில் குவிந்துள்ளது. ஆற்றில் குவிந்துள்ள மணலை இப்பகுதியில் டிராக்டர் முலம் தொடர்ந்து கடத்தப்பட்டு வருகிறது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் குறையும் அபாயம் உள்ளது. கல்வராயன்மலை பகுதியில் தொடரும் மணல் கடத்தலை தடுக்க மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.