/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கல்வெர்ட் அமைத்ததில் முறைகேடு; மூங்கில்துறைப்பட்டில் சர்ச்சை
/
கல்வெர்ட் அமைத்ததில் முறைகேடு; மூங்கில்துறைப்பட்டில் சர்ச்சை
கல்வெர்ட் அமைத்ததில் முறைகேடு; மூங்கில்துறைப்பட்டில் சர்ச்சை
கல்வெர்ட் அமைத்ததில் முறைகேடு; மூங்கில்துறைப்பட்டில் சர்ச்சை
ADDED : ஜன 01, 2026 06:12 AM

மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டில் வடிகால் வாய்க்காலில் புதிதாக கல்வெர்ட் அமைப்பதிற்கு பதில், ஏற்கனவே உள்ள சுவரின் மீது சிமெண்ட் சிலாப் அமைத்து கல்வெர்ட் அமைத்துள்ளது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
மூங்கில்துறைப்பட்டு காமராஜ் நகரில் கழிவுநீர் வாய்க்கால் மீது புதிதாக கல்வெர்ட் அமைக்கவும், சிமெண்ட் சாலை அமைக்க கடந்த ஆண்டு முடிவு செய்யப்பட்டது. இதற்காக, ஊராட்சி பொது நிதியில் இருந்து கல்வெர்ட் அமைக்க ரூ. 1.82 லட்சமும், சிமெண்ட் சாலை அமைக்க ரூ. 2.65 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதன்படி, காமராஜர் நகரில் கழிவுநீர் வாய்க்காலில், புதிதாக கான்கிரீட் சுவர் எழுப்பி கல்வெர்ட் அமைப்பதிற்கு பதில், ஏற்கனவே இருந்த பழைய கல்வெர்ட் சுவர் மீது சிமெண்ட் சிலாப் அமைத்து கல்வெர்ட் கட்டி முடித்தனர். அதபோல், 7 இன்ச் உயரத்திற்கு சிமெண்ட் சாலை அமைப்பதிற்கு பதில் 5 இன்ச் உயரத்தில் சிமெண்ட் சாலை அமைத்துள்ளதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்து மாவட்ட நிர்வாகம் விசாரித்து நடவடிக்கை எடுக்கவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

