/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கூட்டுறவு பணியாளர் குறைதீர் முகாம்
/
கூட்டுறவு பணியாளர் குறைதீர் முகாம்
ADDED : ஜன 10, 2025 11:35 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கூட்டுறவு பணியாளர் குறைதீர் முகாம் நடந்தது.
கள்ளக்குறிச்சி மண்டல இணைப்பதிவாளர் அலுவலகத்தில் நடந்த முகாமிற்கு, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன் தலைமை தாங்கினார். சரக துணைப்பதிவாளர்கள் சுகுந்தலதா, குறிஞ்சிமணவாளன் முன்னிலை வகித்தனர்.
முகாமில், சங்க பணியாளர்கள் மற்றும் ஓய்வு பெற்ற சங்க பணியாளர்களிடமிருந்து 4 மனுக்கள் பெறப்பட்டது. நிகழ்ச்சியில், விழுப்புரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் உதவி பொது மேலாளர் கணபதி, அலுவலக கண்காணிப்பாளர்கள் சாந்தி, சசிகலா மற்றும் அலுவலர் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.