ADDED : ஜூலை 07, 2026 05:14 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் கூட்டுறவு வார நிறைவு விழாவையொட்டி, கூட்டுறவு சார்பில் தயாரிக்கப்படும் பொருட்கள் கண்காட்சி நேற்று நடந்தது.
கண்காட்சியில், இப்கோ உரங்கள், நெய், ஐஸ்கிரீம் உட்பட ஆவின் நிறுவன தயாரிப்புகள், மோட்டாம்பட்டி பெரும்பல நோக்கு கூட்டுறவு சங்கம் சார்பில் கல்வராயன்மலையில் உற்பத்தியாகும் புளி, கருப்பு கவுனி அரிசி, திணை, சாமை, வரகு, கள்ளக்குறிச்சி வேளாண்மை உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் வேர்க்கடலை, எண்ணெய், மூங்கில்துறைப் பட்டு கூட்டுறவு பண்டக சாலை சார்பில் பிரட், பப்ஸ் உள்ளிட்ட தின்பண்டங்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தன.
கண்காட்சியை கலெக்டர் பத்மஜா பார்வை யிட்டு, கூட்டுறவு தயா ரிப்பு பொருட்களின் விற்பனையை அதிகரிக்குமாறு அறிவுறுத்தினார்.
டி.ஆர்.ஓ., ஜீவா, கூட்டுறவு சங்க மண்டல இணைப்பதிவாளர் முருகேசன், துணைப் பதிவாளர்கள் ரகு, சாந்தி (பொது விநியோக திட்டம்), ஆவின் பொது மேலாளர் ஜோஸ்மின் தாஸ், அலுவலக கண்காணிப்பாளர்கள் சசிகலா, சவிதாராஜ், டேன்பெட் மண்டல மேலாளர் பூபேஷ், நானோ யூரியா கள அலுவலர் ஹரிஷ்கவுதம்.
மாவட்ட கூட்டுறவு ஒன்றிய செயலாட்சியர் செல்வராசு, கூட்டுறவு சங்க அலுவலர்கள், செயலாளர்கள், பணியாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
கண்காட்சியில் வைக்கப்பட்டிருந் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது.
