/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கூட்டுறவு திட்டங்கள் : கலெக்டர் ஆய்வு
/
கூட்டுறவு திட்டங்கள் : கலெக்டர் ஆய்வு
ADDED : மார் 21, 2025 06:53 AM

கள்ளக்குறிச்சி : மாவட்டத்தில் விவசாயிகள் அதிகளவில் பயன் அடையும் வகையில் கூட்டுறவுத்துறை செயல்பாடுகள் அமைய வேண்டும் என அதிகாரிகளுக்கு கலெக்டர் பிரசாந்த் அறிவுறுத்தினார்.
மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்கள் மூலம், விவசாயிகள் மற்றும் பொதுக்களுக்கு சுய தொழில் கடன், விவசாய கடன், பொது வினியோக திட்டம் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்படுகிறது. இந்நிலையில் கூட்டுறவு சார்ந்த திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து, கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வு நடந்தது. கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார்.
அதில், கூட்டுறவு துறை கட்டுப்பாட்டில் செயல்படும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், கூட்டுறவு நகர வங்கி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, கூட்டுறவு விற்பனை சங்கம், மொத்த விற்பனை பண்டகசாலை செயல்பாடுகள், கடன் வழங்கும் திறன், லாபகரமாக செயல்படுத்துதல் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் இதர நடவடிக்கைகள், பயிர்க்கடன் விபரம், கடன் இலக்குகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களும் கேட்டறிந்து ஆய்வு செய்யப்பட்டது.
தொடர்ந்து, விவசாயிகள் அதிகளவில் பயனடையும் வகையில் கூட்டுறவுத்துறை செயல்பாடுகள் அமைய வேண்டும் என அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். அப்போது, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.