/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கூட்டுறவு துறை பணியாளர் குறைகேட்பு முகாம்
/
கூட்டுறவு துறை பணியாளர் குறைகேட்பு முகாம்
ADDED : நவ 09, 2024 03:26 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கூட்டுறவு துறை சார்பில் பணியாளர் குறைகேட்பு முகாம் நடந்தது.
வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடந்த முகாமிற்கு, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன் தலைமை தாங்கினார். கள்ளக்குறிச்சி சரக துணைப்பதிவாளர் சுகுந்தலதா முன்னிலை வகித்தார்.
முகாமில், கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள், ஓய்வு பெற்ற பணியாளர்கள் தங்களது பணியில் உள்ள குறைகள் குறித்து மனு அளித்தனர். 10 மனுக்கள் பெறப்பட்டது.
பொது விநியோக திட்ட துணைப்பதிவாளர் சுரேஷ், திருக்கோவிலுார் சரக துணைப்பதிவாளர் குறிஞ்சி மணவாளன், அலுவலக கண்காணிப்பாளர் சவிதாராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.