ADDED : செப் 20, 2024 09:48 PM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வடக்கிழக்கு பருவ மழை முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
கூட்டத்திற்கு, கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாவட்டத்தில் மழை சேதம் மற்றும் பேரிடர் சேதங்கள் ஏற்படக்கூடிய இடங்களை முன்னரே கண்டறிந்து அப்பகுதியில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். போக்குவரத்து சீரமைப்பு மற்றும் மீட்பு பணிகளுக்கு தேவையான உபகரண பொருட்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
வருவாய் துறை, காவல் துறை, தீயணைப்பு துறை, பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சி துறை, கால்நடை துறை, வேளாண்மை துறை, பேரூராட்சி, நகராட்சி துறை மற்றும் மின் துறை ஆகிய துறைகள் ஒருங்கிணைந்து அனைத்து முன்னேற்பாடு பணிகளும் மேற்கொள்ள வேண்டும்என அறிவுறுத்தினார். கூட்டத்தில் டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன், திருக்கோவிலுார் சப் கலெக்டர் ஆனந்த்குமார் சிங், ஆர்.டி.ஓ., லுார்துசாமி, பேரிடர் மேலாண்மை தாசில்தார் நடராஜன் உட்பட அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.