UPDATED : அக் 14, 2026 04:32 PM
ADDED : அக் 14, 2026 04:24 PM
அ நிறம் | அளவு
கள்ளக்குறிச்சி: பாசாரில் விளைநிலத்தில் இருந்த 45 அடி நீளமுள்ள காப்பர் ஒயரை திருடி சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
ரிஷிவந்தியம் அடுத்த அரியாந்தக்காவை சேர்ந்தவர் தனக்கோட்டி மகன் சதீஷ்குமார்,32; இவருக்கு சொந்தமான விளைநிலம் பாசார் கிராமத்தில் உள்ளது. சதீஷ்குமார் நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் விளைநிலத்திற்கு சென்றார். அப்போது, மின்மோட்டாரில் இணைக்கப்பட்டிருந்த 45 அடி நீளமுள்ள காப்பர் ஒயரை மர்மநபர்கள் திருடி சென்றது தெரிந்தது. இது குறித்து சதீஷ்குமார் அளித்த புகாரின் பேரில் ரிஷிவந்தியம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
