ADDED : ஏப் 06, 2025 07:38 AM

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் நகர கவுன்சிலர் ரவி இல்ல திருமண விழாவில், தி.மு.க., மாவட்ட செயலாளர் கவுதமசிகாமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
திருக்கோவிலுார் நகர கவுன்சிலரும், ஆரிய வைசிய சமூக துணை தலைவருமான ரவி இல்ல திருமண விழா தேவி முருகன் திருமண மண்டபத்தில் நடந்தது. ரவி, ஹேமலதா தம்பதியினர் வரவேற்றனர்.
மணமக்கள் சஞ்சய்குமார், ரோஷினியை மாவட்ட செயலாளர் கவுதம சிகாமணி, பொருளாளர் ஜனகராஜ், நகராட்சி சேர்மன் முருகன், ஒன்றிய செயலாளர்கள் கல்பட்டுராஜா, விஸ்வநாதன், மாவட்ட ஊராட்சி குழு துணை சேர்மன் தங்கம், நகர செயலாளர் கோபி கிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர் செல்வராஜ், நகர அவை தலைவர் குணா, ஆரிய வைசிய சமூக தலைவர் வாசுதேவன், நிர்வாகஸ்தர் சேகர், ஆசிரியர் மகேஷ், ஜி.ஆர்.டெக்ஸ்டைல்ஸ் ரவிக்குமார் மற்றும் ஆரிய வைசிய நிர்வாகிகள், நகர மன்ற உறுப்பினர்கள், உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
வழக்கறிஞர் சச்சின்குமார் நன்றி கூறினார்.