ADDED : செப் 25, 2024 07:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : கல்வராயன்மலையில் கள்ளச்சாராயம் விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
கல்வராயன்மலையில் உள்ள மணியார்பாளையம் கிராமத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், கரியாலுார் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பாண்டியன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மாலை அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.
அதில் மணியார்பாளையத்தை சேர்ந்த குமரன்,40, தனது நிலத்தில் கள்ளச்சாராயம் மறைத்து வைத்து விற்பனை செய்தது தெரிந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து, 30 லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்தனர்.