/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கூரை வீட்டில் தீ விபத்து தம்பதி உடல் கருகி பலி
/
கூரை வீட்டில் தீ விபத்து தம்பதி உடல் கருகி பலி
ADDED : ஜன 13, 2024 01:12 AM

கச்சிராயபாளையம்,:கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராயபாளையம் அடுத்த மாத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன், 70, இவரது மனைவி அகிலாண்டம், 65. இவர்களுக்கு நான்கு மகன்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசிக்கின்றனர். சீனிவாசனும், அகிலாண்டமும், தனியாக கூரை வீட்டில் வசித்தனர்.
நேற்று முன்தினம் இரவு 10:30 மணிக்கு இருவரும் வீட்டில் துாங்கிக் கொண்டிருந்தபோது, வீடு திடீரென தீப்பிடித்தது. அதில், இருவரும் வெளியேற முடியாமல் வீட்டிற்குள் சிக்கினர்.
கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலைய அலுவலர் ஜமுனாராணி தலைமையில் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். எனினும், சீனிவாசனும், அகிலாண்டமும் உடல் கருகி இறந்து விட்டனர்.
தம்பதியின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பினர். மின்கசிவு காரணமாக வீடு தீபிடித்து எரிந்தது தெரிந்தது.