/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வீட்டின் மீது முறிந்து விழுந்த மரம் காயமின்றி தப்பிய தம்பதி
/
வீட்டின் மீது முறிந்து விழுந்த மரம் காயமின்றி தப்பிய தம்பதி
வீட்டின் மீது முறிந்து விழுந்த மரம் காயமின்றி தப்பிய தம்பதி
வீட்டின் மீது முறிந்து விழுந்த மரம் காயமின்றி தப்பிய தம்பதி
ADDED : ஆக 20, 2025 07:41 AM

உளுந்துார்பேட்டை, : திருநாவலுாரில் வீட்டின் மீது புளியமரம் முறிந்து விழுந்த வயதான தம்பதி காயமின்றி உயிர்தப்பினர்.
உளுந்துார்பேட்டை அடுத்த திருநாவலுார் பஸ் நிறுத்தம் அருகே வசிப்பவர் பாலு, 76; இவரது மனைவி ஆதிலட்சுமி, 74; இவர்கள் ஆஷ்பெஸ்டால் ஷீட் போட்ட வீட்டில் ஓட்டல் நடத்தி வந்தார்.
நேற்று காலை 3 மணிக்கு, இவரது வீடு அருகே உள்ள பெரிய புளியமரம் திடீரென சாய்ந்து வீட்டின் மீது விழுந்தது.
அப்போது வீட்டிற்குள் துாங்கிக் கொண்டிருந்த பாலு, ஆதிலட்சுமி ஆகியோர் சத்தம் கேட்டு வீட்டை விட்டு வெளியே ஓடி வந்து உயிர்தப்பினர். வீடு மட்டும் சேதம் அடைந்தது. தகவல் அறிந்த போலீசார், நெடுஞ்சாலைத் துறையினர் வீட்டின் மீது விழுந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்தினர்.