/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஓட்டு வீடு இடிந்து விழுந்து தம்பதி காயம்
/
ஓட்டு வீடு இடிந்து விழுந்து தம்பதி காயம்
ADDED : டிச 01, 2024 04:28 AM
திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் அருகே தொடர் மழை காரணமாக ஓட்டு வீடு இடிந்து விழுந்ததில் கணவன், மனைவி லேசான காயமடைந்தனர்.
திருக்கோவிலுார் அடுத்த விளந்தை காலனி, மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரங்கநாதன், 40; இவரது மனைவி புவனேஸ்வரி, 35; மகன் செந்தமிழ்ச்செல்வன், 12; மகள்கள் புவனிஷா, 6; தர்னிஷா, 3; நேற்று முன்தினம் இரவு குடும்பத்துடன் வீட்டில் துாங்கிக் கொண்டிருந்தனர்.
நேற்று அதிகாலை 2:00 மணியளவில் ஓட்டு வீட்டின் வாரைகள் முறிந்து ஓடுகள் சரிந்து விழுந்தன. இதில் ரங்கநாதன் அவரது மனைவி புவனேஸ்வரி லேசான காயமடைந்தனர். பிள்ளைகள் காயமின்றி தப்பினர்.
தகவல் அறிந்த வருவாய்த்துறை மற்றும் மணலுார்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

