/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
நீதிமன்ற கட்டுமானப்பணி மாவட்ட நீதிபதி ஆய்வு
/
நீதிமன்ற கட்டுமானப்பணி மாவட்ட நீதிபதி ஆய்வு
ADDED : மார் 13, 2024 12:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம் : சங்கராபுரத்தில் சார்பு நீதிமன்ற கட்டுமானப் பணிகளை மாவட்ட நீதிபதி ஆய்வு செய்தார்.
சங்கராபுரம் ஓருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சார்பு நீதிமன்ற கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகளை மாவட்ட முதன்மை நீதிபதி இருசன் பூங்குழலி ஆய்வு செய்தார். மேலும் புதிதாக துவக்க உள்ள இ-சேவை மையத்தையும் பார்வையிட்டார்.
மாவட்ட உரிமையியல் நீதிபதி முல்லைவாணன், குற்றவியல் நீதித்துறை நடுவர் ஆதியான் மற்றும் வழக்கறிஞர் சங்கத் தலைவர் ரவி, செயலாளர் ராமசாமி, வழக்கறிஞர்கள் தாமரைச்செல்வன், பிரபாகரன், முகமது பாஷா, குமரேசன், ரமேஷ்குமார், சுரேஷ்பாபு, பாரி, திருநாவுக்கரசு உடனிருந்தனர்.

