/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பைக்கில் இருந்து விழுந்த கோர்ட் ஊழியர் பலி
/
பைக்கில் இருந்து விழுந்த கோர்ட் ஊழியர் பலி
ADDED : ஜூலை 25, 2025 02:26 AM
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டையில் கோர்ட் ஊழியர் பைக்கில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்து இறந்தார்.
பெரம்பலுார், மதனகோபாலபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ், 45; உளுந்துார்பேட்டை சார்பு நீதிமன்றத்தில் ஸ்டெனோவாக பணி புரிந்து வந்தார். இவர், பெரம்பலுாரில் இருந்து பணிக்கு பஸ்சில் வந்து செல்வது வழக்கம். நேற்று தனது ஸ்பிளண்டர் பைக்கில் உளுந்துார்பேட்டைக்கு வந்தார்.
காலை 9:45 மணியளவில் உளுந்துார்பேட்டை அரசு ஐ.டி.ஐ., அருகே வந்தபோது மொபைல் போனை எடுக்க முயன்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தார்.
உடன் புதுச்சேரி ஜிப்மரில் சேர்க்கப்பட்டு அங்கு அவர் மதியம் 2:00 மணியளவில் இறந்தார்.
உளுந்துார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.