UPDATED : அக் 14, 2026 05:41 PM
ADDED : அக் 14, 2026 05:37 PM

அ நிறம் | அளவு
மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்ட அருகே உள்ள புத்திராம்பட்டில் மின்னல் தாக்கி காளை மாடு இறந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மூங்கில்துறைப்பட்டு அடுத்த புத்திராம்பட்டு கிராமத்தை சேர்ந்த லட்சுமணன் மகன் முனியன் என்பவரின் காளை மாடு அவரது விவசாய நிலத்தில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது இடி ,மின்னலுடன் பலத்த மழை பெய்தது.இதில் மின்னல் தாக்கி காளை மாடு இறந்தது.
