/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கிணற்றில் விழுந்த பசுமாடு மீட்பு
/
கிணற்றில் விழுந்த பசுமாடு மீட்பு
ADDED : ஆக 22, 2025 10:09 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம் : சங்கராபுரம் அருகே விவசாய கிணற்றில் விழுந்த பசு மாடு மீட்கப்பட்டது.
சங்கராபுரம் அடுத்த வடசிறுவளூர் கிராமத்தை சேர்ந்தவர் கருப்புசாமி. இவர் தனக்கு சொந்தமான பசு மாடுகளை நேற்று காலை ஆரூர் செல்லும் சாலையோரம் மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றார். அப்போது அதே ஊரைச் சேர்ந்த பவன்குமார் என்பவரின் 60 அடி ஆழம் கொண்ட விவசாய கிணற்றின் அருகே மேய்ந்த பசுமாடுகளுக்குள் இடையே மோதல் ஏற்பட்டு, ஒரு பசு மாடு கிணற்றில் விழுந்தது. தகவலறிந்த சங்கராபுரம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று கிணற்றில் விழுந்து பசுமாட்டினை மீட்டனர்.