ADDED : மே 13, 2026 06:26 AM

அ நிறம் | அளவு
சின்னசேலம்: சின்னசேலம், பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் மூர்த்தி மகன் தினேஷ், 27;
இ வர் அதே பகுதியைச் சேர்ந்த கணேஷ் என்பவரின் விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து பயிர் செய்து வருகிறார். அவரது நிலத்தில் 4 பசு மாடுகள் வளர்த்து வந்தார். இந்நிலையில் பெத்தானுார் கிராமத்தைச் சேர்ந்த இளவரசன் மகன் ராம்குமார், 28; நேற்று அதிகாலை விவசாய நிலத்தில் கட்டி யிருந்த ஒரு பசு மாட்டை திருடி சென்றார். அப்போது, வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த மொபட்டையும் திருட ராம்குமார் முயற்சித்தார்.
சத்தம்கேட்டு வீட்டின் உரிமையாளர் தினேஷ் மற்றும் அக்கம்பக்கத்தினர் ராம்குமாரை மடக்கி பிடித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சின்னசேலம் போலீசார் ராம்குமாரை கைது செய்து மாட்டை கைப்பற்றி உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.
