/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் கோ பூஜை
/
கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் கோ பூஜை
ADDED : அக் 25, 2025 06:59 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னசேலம்: சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் ஐப்பசி மாத முதல் வெள்ளியை முன்னிட்டு கோ பூஜை நடந்தது.
அதனையொட்டி, நேற்று காலை 7:30 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட கோமாதாவிற்கு மாலைகள் சார்த்தி, பட்டாடை போர்த்தி மகா தீபாராதனை நடந்தது. பூஜைகளை கோவில் அர்ச்சகர் முரளி சர்மா செய்திருந்தார்.
முன்னதாக மூலவருக்கும் சிறப்பு பூஜை நடந்தது. வாசவி வனிதா சங்க தலைவர் வேலுமணி, மகிளா விபாக் உட்பட பலர் பங்கேற்றனர்.

