UPDATED : நவ 13, 2026 08:27 PM
ADDED : நவ 13, 2026 08:24 PM
அ நிறம் | அளவு
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், மாணவிகளுக்கு முதல் உதவி விழிப்புணர்வு செயல்முறை பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில், ஜே.ஆர்.சி., மாணவிகளுக்கு நடந்த செயல்விளக்க பயிற்சிக்கு, தலைமை ஆசிரியர் கீதா தலைமை தாங்கினார். ரெட் கிராஸ் சொசைட்டியின் மாநில பொதுக்குழு உறுப்பினரும், முதலுதவி பயிற்றுநருமான ஜானகிராமன் சி.பி.ஆர்., எனப்படும் முதலுதவி சிகிச்சை குறித்து மாணவிகளுக்கு செயல் விளக்க பயிற்சி அளித்தார். தொடர்ந்து மாணவிகளின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் ஜே.ஆர்.சி., மாணவிகள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பங்கேற்றனர். கொண்டனர். ஜே.ஆர்.சி., ஆலோசகர் தமிழரசி நன்றி கூறினார்.
