/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கிரிக்கெட் பேட்டர், விக்கெட் கீப்பருக்கான தேர்வு திறன் போட்டி ஜன.19ல் நடக்கிறது
/
கிரிக்கெட் பேட்டர், விக்கெட் கீப்பருக்கான தேர்வு திறன் போட்டி ஜன.19ல் நடக்கிறது
கிரிக்கெட் பேட்டர், விக்கெட் கீப்பருக்கான தேர்வு திறன் போட்டி ஜன.19ல் நடக்கிறது
கிரிக்கெட் பேட்டர், விக்கெட் கீப்பருக்கான தேர்வு திறன் போட்டி ஜன.19ல் நடக்கிறது
ADDED : ஜன 09, 2025 12:24 AM
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த கிரிக்கெட் பேட்டர், விக்கெட் கீப்பர்களை அடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்வதற்கான தேர்வு திறன் போட்டி வரும் ஜன.19-ல் நடக்கிறது.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் கள்ளக்குறிச்சி மாவட்டசங்க செயலாளர் லட்சுமி நாராயணன் செய்திக்குறிப்பு : தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் கிரிக்கெட் வீரர்களிடம் தனித்திறமைகளை கண்டறிந்து தேவையான பயிற்சி அளித்து அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் பணிகள் நடக்கிறது. அதற்கென அந்தந்த மாவட்ட சங்கங்கள் சார்பில் தகுதிப்போட்டிகள் நடத்தி, வீரர்களை தேர்வு செய்து வருகின்றனர்.
அதனடிப்படையில் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்ட கிரிக்கெட் சங்கங்கள் சார்பில் வரும் ஜன.19ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சூர்யா கல்லுாரியில் காலை 7:30 மணிக்கு சிறந்த கிரிக்கெட் பேட்டர்கள் மற்றும் விக்கட் கீப்பர்களை தேர்வு செய்வதற்கான தேர்வு திறன் போட்டி நடக்கிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்டு 13 முதல் 21 வயதுக்கு உட்பட்ட வீரர்கள் இதில் பங்கேற்கலாம். கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த வீரர்கள் காந்தி ரோடு, ராஜா தியேட்டர் அருகில் உள்ள கள்ளக்குறிச்சி மாவட்ட கிரிக்கெட் சங்க அலுவலகத்தில் நேரில் வந்து இத்தேர்வுக்கான விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ள வேண்டும்.
விண்ணப்பங்களை சங்கத்தில் வரும் ஜன.15ஆம் தேதிக்குள் ஆதார் கார்டு நகலுடன் அளித்தால் அனுமதி கடிதம் வழங்கப்படும். கடிதம் பெற்றவர்கள் போட்டி நடக்கும் சூர்யா கல்லுாரிக்கு நேரில் சென்று பங்கேற்கலாம் என அறிவுறுத்தப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு 99440 00946 என்ற மொபைல் எண் மூலமாக தொடர்பு கொள்ளலாம் என சங்க செயலாளர் லட்சுமி நாராயணன் தெரிவித்துள்ளார்.