/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கிராமத்தில் கிரிக்கெட் போட்டி
/
கிராமத்தில் கிரிக்கெட் போட்டி
ADDED : ஜன 19, 2025 06:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரிஷிவந்தியம்: யால் கிராமத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆறுபடை அணி சார்பில் கிரிக்கெட் போட்டி நடந்தது.
வாணாபுரம் அடுத்த யால் கிராமத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, முதலாமாண்டு 'பாக்ஸ் கிரிக்கெட்' போட்டி நடந்தது. சுற்று வட்டார பல்வேறு கிராமங்களை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட அணியினர் போட்டியில் கலந்து கொண்டனர்.
பாக்ஸ் கிரிக்கெட் என்பதால், ஒரு அணியில் 6 வீரர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். 'அண்டர் ஆர்ம்' முறையில் போட்டி நடந்தது. வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.4 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.3 ஆயிரம், 4ம் பரிசாக ரூ.2 ஆயிரமும் வழங்கப்பட உள்ளது.