பைக்குகள் மோதல்: மாணவர் பலி
கண்டாச்சிபுரம்:- விழுப்புரம் அடுத்த கண்டம்பாக்கத்தை சேர்ந்தவர் தனசேகர் மகன் அய்யனார்,18; இவர் மேல்வாலையில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி் ஐ.டி.ஐ.,யில் படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் மாலை தனது நண்பர்களான மேல்வாலை கிராமத்தைச் சேர்ந்த ஜஸ்டீன்,15; பிரசாந்த் ஆகி யோருடன் கண்டாச்சிபுரத்தில் இருந்து மேல்வாலைக்க பைக்கில் வந்து கொண்டிருந்தனர். ஜஸ்டின் பைக்கை ஓட்டி வந்தார்.
மேல்வாலை அருகே வந்தபோதுனா எதிரே வந்த பல்சர் பைக் மீது மோதியது. அதில், கண்டாச்சிபுரம் அரசுப் பள்ளியில் 10 வகுப்பு படித்து வரும் ஸ்டாலின் மகன் ஜஸ்டின்,15; சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயமடைந்த பல்சர் பைக் ஓட்டி வந்த துத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்த பாலாஜி,22; பிரசாந்த் மற்றும் அய்யனார் ஆகிய மூவரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
விபத்து குறித்து கண்டாச்சிபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
பஸ்சில் சிக்கி வியாபாரி பலி
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அடுத்த வீரட்டக்காரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜி, 59; திருக்கோவிலுார் பஸ் நிலையத்தில் முறுக்கு வியாபாரம் செய்து வந்தார். நேற்று மதியம் வேலுாரில் இருந்து கும்பகோணம் செல்லும் அரசு பஸ்சில் ஏறி முறுக்கு விற்றுக் கொண்டிருந்தார். டிரைவர் திடீரென பஸ்சை ஸ்டார்ட் செய்யவே அரசு மருத்துவமனை அருகே முன்பக்க படி வழியாக கீழே இறங்கியபோது, தவறி விழுந்து பஸ் பின் சக்கரத்தில் சிக்கி இறந்தார். திருக்கோவிலுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கிணற்றில் விழுந்த பெண் பலி
கள்ளக்குறிச்சி: வரஞ்சரம் அடுத்த வேளாக்குறிச்சியைச் சேர்ந்தவர் முருகன் மனைவி கண்ணகி,33; இவர், அதே பகுதியில் கால்நடைகள் மேய்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது, ராஜா என்பவரின் கிணறு அருகில் சென்ற போது, திடீரென கால் தவறி கிணற்றில் விழுந்து இறந்தார். வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
டேங்க் ஆபரேட்டர் பலி
உளுந்துார்பேட்டை: வானாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் தவிடன்,58; உளுந்துார்பேட்டை நகராட்சியில் டேங்க் ஆபரேட்டராக பணிபுரிந்தார்.
இவர், வானாம்பட்டு கிராமத்தில் இருந்து சேந்தநாடு கிராமத்திற்கு சைக்கிளில் சென்றறபோது, எதிரே வந்த பொலிரோ பிக் அப் சரக்கு வாகனம் மோதியது. அதில், அவர் சம்பவஇடத்திலேயே இறந்தார். திருநாவலுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.