ADDED : மார் 15, 2024 12:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தியாகதுருகம்: தியாதுருகம் வேளாண் துறை சார்பில் சின்ன மாம்பட்டு கிராமத்தில் பயிர் மகசூல் போட்டி நடந்தது. துணை இயக்குனர் விஜயராகவன் தலைமை தாங்கினார்.
தியாகதுருகம் வட்டார உதவி இயக்குனர் மோகன்ராஜ், உதவி இயக்குனர் வனிதா, விவசாய பிரதிநிதி அம்மாசி முன்னிலை வகித்தனர். விவசாயி வெங்கடேசன் நிலத்தில் சாகுபடி செய்துள்ள கம்பு தனசக்தி ரக பயிரை அறுவடை செய்து மகசூல் கணக்கீடு செய்யப்பட்டது.
இது மாவட்ட அளவிலான அதிக மகசூல் போட்டியில் பங்கேற்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. துணை வேளாண் அலுவலர் சிவனேசன், உதவி விதை அலுவலர் ஞானவேல், உதவி வேளாண் அலுவலர் ரகுராமன் உட்பட விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்.

