/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பட்டதாரியிடம் ரூ.8.97 லட்சம் அபேஸ் சைபர் கிரைம் கும்பலுக்கு வலை
/
பட்டதாரியிடம் ரூ.8.97 லட்சம் அபேஸ் சைபர் கிரைம் கும்பலுக்கு வலை
பட்டதாரியிடம் ரூ.8.97 லட்சம் அபேஸ் சைபர் கிரைம் கும்பலுக்கு வலை
பட்டதாரியிடம் ரூ.8.97 லட்சம் அபேஸ் சைபர் கிரைம் கும்பலுக்கு வலை
ADDED : ஜன 05, 2025 05:38 AM
கள்ளக்குறிச்சி : உளுந்துார்பேட்டை அடுத்த உ.கீரனுாரை சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் சரத்குமார்,32; டிப்ளமோ பட்டதாரி. இவரது மொபைல் போனுக்கு கடந்த 27ம் தேதி, வீட்டில் இருந்தே பணி புரிய தொடர்பு கொள்க என குறுந்தகவல் வந்தது.
அதில் இருந்த தொலைபேசி எண்ணை சரத்குமார் தொடர்பு கொண்டார். மறுமுனையில் பேசிய நபர் ஆன்லைனில் தங்கத்தை வாங்கி, மீண்டும் ஆன்லைனிலேயே விற்றால் கமிஷன் கிடைக்கும் எனக்கூறி, டெலிகிராம் ஐ.டி., மற்றும் வெப்சைட் முகவரியை அனுப்பினார்.
மர்மநபர்கள் தெரிவித்தவாறு ஆன்லைனில் பணிகளை செய்த சரத்குமாரின் வங்கி கணக்கிற்கு ரூ.1,058 பணம் வந்தது. அடுத்தகட்ட பணிகளை தொடர ஆன்லைனில் பணம் செலுத்த வேண்டும் என மர்மநபர்கள் கூறினர்.
அதனை நம்பிய சரத்குமார் மூன்று தவணைகளில், ரூ.8.97 லட்சத்தை ஆன்லைன் மூலம் செலுத்தி, பணிகளை செய்தார். அப்போது, வெப்சைட்டில் சரத்குமாரின் கணக்கில் பெருந்தொகை பதிவாகி இருந்தது. அந்த பணத்தை தனது வங்கி கணக்கிற்கு மாற்ற முடியவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சரத்குமார், அளித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து, மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.

