/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பால் பண்ணை உரிமையாளர் தாக்கு வி.சி., செயலாளர் உட்பட 4 பேர் கைது
/
பால் பண்ணை உரிமையாளர் தாக்கு வி.சி., செயலாளர் உட்பட 4 பேர் கைது
பால் பண்ணை உரிமையாளர் தாக்கு வி.சி., செயலாளர் உட்பட 4 பேர் கைது
பால் பண்ணை உரிமையாளர் தாக்கு வி.சி., செயலாளர் உட்பட 4 பேர் கைது
ADDED : பிப் 13, 2024 04:43 AM
உளுந்துார்பேட்டை: பால் பண்ணை உரிமையாளரை தாக்கிய வி.சி.,நகர செயலாளர் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
உளுந்துார்பேட்டை அடுத்த குஞ்சரத்தை சேர்ந்தவர் டாக்டர் ஹரிஹரன். இவரது மகள் பிறந்த நாளையொட்டி, தி.மு.க., கொடி மற்றும் பேனர்களை உளுந்துார்பேட்டை வி.சி., நகர செயலாளர் முருகன், 44; கட்டியிருந்தார்.
விழா முடிந்த பிறகு அவற்றை அவிழ்த்து கொண்டு வந்தபோது அதே பகுதியில் பால் பண்ணை வைத்துள்ள மரியஆனந்த், 40; என்பரிடம் வேலை செய்யும் ஜான் பீட்டர், 2 கொடி கம்ப பைப்பை எடுத்துச் சென்றார்.
இதனால் ஆத்திரமடைந்த முருகன் மற்றும் அவரது ஆதரவாளர்கள், பால் பண்ணையில் இருந்த 20 லிட்டர் பாலை கேனுடன் மினி டெம்போவில் ஏற்றிச் சென்றனர்.
இதனைப் பார்த்த மரியஆனந்த், பால் கேனை வாங்க மினி டெம்போவை பைக்கில் விரட்டிச் சென்றார். அப்போது, முருகன் மற்றும் அவரது தரப்பினர் பைக்கை காலால் எட்டி உதைத்தனர். இதில் மரியஆனந்த் கீழே விழுந்து படுகாயமடைந்தார். காயமடைந்த அவர், கள்ளக்குறிச்சி தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து மரியஆனந்த் தந்தை அலெக்சந்திரா கொடுத்த புகாரின் பேரில் எலவனாசூர்கோட்டை போலீசார் வழக்கு பதிந்து, முருகன், அன்பழகன் மகன் அமர்,27; பாலகிருஷ்ணன் மகன் தமிழ்,27; உத்தண்டி மகன் ராசு,29; ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.