/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பால்வளத்துறை திட்டங்கள் : கலெக்டர் ஆய்வு
/
பால்வளத்துறை திட்டங்கள் : கலெக்டர் ஆய்வு
ADDED : ஜூன் 13, 2025 03:59 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் பால்வளத்துறை திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் வரும் 18 ம் தேதி வருகை புரிந்து நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார். இதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் பால்வளத்துறை மானியக் கோரிக்கையின் புதிய அறிவிப்புகளை செயல்படுத்துதல், புதிய ஆவின் விற்பனை மையங்களை உருவாக்குதல், பால் கூட்டுறவு சங்கங்களை அமைத்தல், கால்நடைத்துறை திட்டங்கள், கடனுதவிகள், கூட்டுறவு மற்றும் கால்நடைத்துறை செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
மேலும், அமைச்சர் வருகையின்போது மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள், ஆய்வுகள், நலத்திட்ட உதவிகள் வழங்குதல் குறித்தும் ஆய்வு நடந்தது.
கூட்டத்தில் ஆவின் பொது மேலாளர் ஜேஸ்பின் தாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.