/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அணையில் ஏற்பட்ட உடைப்பு; தற்காலிகமாக சீரமைப்பு
/
அணையில் ஏற்பட்ட உடைப்பு; தற்காலிகமாக சீரமைப்பு
ADDED : டிச 26, 2024 07:03 AM

திருக்கோவிலுார் : வெள்ளத்தால் திருக்கோவிலுார் அணையில் உடைப்பு ஏற்பட்ட கரை பகுதி தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது.
பெஞ்சல் புயல் வெள்ளத்தால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், திருக்கோவிலுார் அணைக்கட்டை 2 லட்சத்திற்கும் அதிகமான கன அடி நீர் கடந்து சென்றது. இதனால், அணைக்கட்டின் வடகரை உடைந்தது.
தென்பெண்ணை ஆற்றில் தொடரும் நீர் வரத்தால், அருகிலுள்ள விளை நிலங்கள் பாதிக்கப்படுவதால், கரையை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். அணையின் கரையை செப்பனிடும் பணியை கடந்த 5ம் தேதி நீர்வளத்துறை துவக்கியது.
அதிகப்படியான நீர்வரத்து காரணமாக கரையை கட்டுவது பெரும் சவாலாக இருந்தது. 20 நாள் போராட்டத்திற்குப் பிறகு நேற்று 350 மீட்டர் துாரத்திற்கு கரை ஓரளவிற்கு கட்டி முடிக்கப்பட்டது.
எனினும் கல் இடுக்குகள் வழியாக தண்ணீர் சென்று கொண்டிருக்கும் சூழலில், இதனை முழுமையாக அடைக்க இன்னும் ஒரு வார காலமாகும் என கூறப்படுகிறது. இது தற்காலிக ஏற்பாடாகதான் இருக்கும் என்கின்றனர் நீர்வளத்துறை அதிகாரிகள்.
அணை மற்றும் கரையை பலப்படுத்த விரிவான திட்ட அறிக்கையை நீர்வளத்துறை, அரசுக்கு அனுப்பி வைத்துள்ளது.

