/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தீ விபத்தில் கரும்பு பயிர் சேதம்
/
தீ விபத்தில் கரும்பு பயிர் சேதம்
ADDED : நவ 10, 2024 04:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம், : சங்கராபுரம் அருகே தீ விபத்தில் 3 ஏக்கர் கரும்பு பயிர் கருகி சேதமடைந்தது.
சங்கராபுரம் அடுத்த சோழம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் முருகப்பிள்ளை மகன் பிரகாஷ். இவரது கரும்பு தோட்டத்தில் நேற்று திடிரென தீப்பிடித்தது. காற்று வேகமாக வீசியதால் தீ மளமளவென கொழுந்து விட்டு எரிய தொடங்கியது.
இது பற்றி தகவலறிந்த சங்கராபுரம் தீயணைப்பு அலுவலர்(பொ) ரமேஷ்குமார் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து செ்ன்று தீ மேலும் பரவாமல் இருக்க தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் 3 ஏக்கர் கரும்பு பயிர் கருகி சேதமடைந்தது. தீ விபத்து மின் கசிவு காரணமாக ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.