/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கோவில் சிலை சேதம்: இருவர் மீது வழக்கு
/
கோவில் சிலை சேதம்: இருவர் மீது வழக்கு
ADDED : செப் 25, 2024 10:14 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூங்கில்துறைப்பட்டு, : மூங்கில்துறைப்பட்டு அடுத்த புத்திராம்பட்டிலிருந்து சிட்டந்தாங்கல் செல்லும் சாலையில் முனியப்பன் கோவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள சிலைகள், மணி மற்றும் உண்டியல் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றள்ளனர்.
ஊர் முக்கியஸ்தர்கள் விசாரித்ததில், அதேப் பகுதியை சேர்ந்த சிவா, 30, செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அவரது தாய் உஷாராணியிடம் கேட்டபோது, அவர், கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து புத்திராம்பட்டு சின்னதுரை அளித்த புகாரின் பேரில், சிவா மற்றும் உஷாராணி மீது வடபொன்பரப்பி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.