/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கலெக்டர் அலுவலகத்தில் 'டாம்கோ' திட்டம் ஆய்வு
/
கலெக்டர் அலுவலகத்தில் 'டாம்கோ' திட்டம் ஆய்வு
ADDED : ஏப் 23, 2025 11:11 PM

கள்ளக்குறிச்சி:
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் எனும், 'டாம்கோ' மூலம் செயல்படுத்தும் திட்டங்கள் தொடர்பான கலந்தாய்வு கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
டாம்கோ தலைவர் பெர்னாண்ட்ஸ் ரத்தின ராஜா தலைமை தாங்கினார். கலெக்டர் பிரசாந்த், மலையரசன் எம்.பி., முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் டாம்கோ திட்டத்தின் சார்பில் செயல்படுத்தும் தனிநபர் கடன், கைவினை கலைஞர் கடன், சுய உதவிக்குழுக்கான சிறுகடன், கல்விக் கடன், கிறிஸ்துவ தேவாலயங்களில் பணிபுரியம் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரிய உறுப்பினர் அட்டை பெற்றவர்கள் விபரம், மகளிர் உதவும் சங்கங்கள் மூலம் நன்கொடை செலுத்தப்பட்ட விபரம், உதவி தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.தொடர்ந்து சிறுபான்மையினர், கிறிஸ்துவ மற்றும் முஸ்லீம் சங்க நிர்வாகிகளிடம் குறைகள் மற்றும் கோரிக்கைகள் கேட்டறிந்து, அதனை நிறைவேற்றிட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேலும் டாம்கோ திட்டத்தின் கீழ் செயல்படுத்தி வரும் திட்டங்களை அனைவரும் உரிய முறையில் பெற்று பயன்பெற வேண்டும் என்று எடுத்துரைக்கப்பட்டது.
கூட்டத்தில் டி.ஆர்.ஓ., ஜீவா, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் முருகேசன், துணை பதிவாளர்கள் சுகந்தலதா, குறிஞ்சிமணவாளன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் கீதா, சிறுபான்மையினர் நல ஆணைய உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.