தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/நான்கு வழி சாலையோர பள்ளங்களால் விபத்து... அபாயம்!பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை தேவை

நான்கு வழி சாலையோர பள்ளங்களால் விபத்து... அபாயம்!பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை தேவை

நான்கு வழி சாலையோர பள்ளங்களால் விபத்து... அபாயம்!பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை தேவை


UPDATED : மே 14, 2026 03:31 PM

ADDED : மே 14, 2026 03:10 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 14, 2026 03:31 PM ADDED : மே 14, 2026 03:10 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டிலிருந்து கள்ளக்குறிச்சி வரையிலான நான்கு வழி சாலையோரம் பல இடங்களில் மெகா சைஸ் பள்ளங்காள் உள்ளதால் விபத்து ஏற்படும் அபாயத்தில் வாகன ஓட்டிகள் செல்கின்றனர்.விபத்து தடுக்க தடுப்புச் சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருவண்ணாமலையில் இருந்து கள்ளக்குறிச்சி வரையிலான இரு வழி சாலை நான்கு வழி சாலையாக தரம் உயர்த்தப்பட்டு சாலை அமைக்கப்பட்டு வருகின்றனர். இந்த சாலையில் சில இடங்களில் சாலை போடப்படாமல் இரு வழி சாலையிலே வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலைப்பணிய விரிந்து முடிக்க நடவடிக்கை எடுத்து பணியை முடிக்கவேண்டும் என்று பொதுமக்கள், சமூக ஆர்வலர்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மூங்கில்துறைப்பட்டிலிருந்து கள்ளக்குறிச்சி வரையிலான நான்கு வழி சாலைகளில் பல இடங்களில் சாலை ஓரத்தில் மெகா சைஸ் பள்ளங்கள் ஆங்காங்கே உள்ளது.

சாலைப்ப பணி முடிந்தும் பல இடங்களில் உள்ளபள்ளங்களை தடுப்பு சுவர் அமைக்காமல் உள்ளது.இரவு நேரங்களில் வாகனங்கள் முந்திச் செல்லும் போது சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட அதிக அளவில் வாய்ப்புள்ளது.நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் இவ்வழியே பலமுறை சென்றாலும் விபத்து ஏற்படக்கூடிய பள்ளங்களை கண்டுகொள்ளாமல் செல்வது வேடிக்கையாக உள்ளது.

மூங்கில்துறைப்பட்டு அடுத்த சவேரியார் பாளைய,ம் மைக்கேல் புரம், மேல்சிறுவள்ளூர்கூட்ரோடு ஆகிய பகுதிகளில் சாலையோரங்களில் உள்ள பள்ளங்கள் விபத்து ஏற்படுத்தக்கூடிய வகையில் அமைந்துள்ளது.மைக்கேல் புரத்தில் சில மாதங்களுக்கு முன்பு ஊராட்சி சார்பில் கழிவுநீர் கால்வாய் போடப்பட்டனர். பின்பு அதன் ஒட்டியே நெடுஞ்சாலை சார்பில் நான்கு வழி சாலை அமைத்தனர். சாலை அமைத்து பல மாதங்கள் ஆகியும் தடுப்பு சுவர் அமைக்காமல் உள்ளனர்.இதேபோல் மேல் சிறுவலுார் கூட்டு ரோட்டில் சாலையோரம் செல்லும் கிளை கால்வாயில் பள்ளமும் விபத்து ஏற்படுத்தக்கூடிய நிலையில் உள்ளது.

எனவே குறிப்பிடிப்பட்டுள்ள இந்த இடங்களை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்து, முறையாக தடுப்பு சுவர் அல்லது விபத்து தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க

நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் விபத்துகள் நடக்கும் முன் போர்கால அடிப்படையில் இந்த பணிகளை மேற்கொள்ளவேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us