/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
டி.ஏ.பி., உரத்திற்கு மாற்றாக சூப்பர் பாஸ்பேட் பயன்படுத்த வேளாண்துறை ஆலோசனை
/
டி.ஏ.பி., உரத்திற்கு மாற்றாக சூப்பர் பாஸ்பேட் பயன்படுத்த வேளாண்துறை ஆலோசனை
டி.ஏ.பி., உரத்திற்கு மாற்றாக சூப்பர் பாஸ்பேட் பயன்படுத்த வேளாண்துறை ஆலோசனை
டி.ஏ.பி., உரத்திற்கு மாற்றாக சூப்பர் பாஸ்பேட் பயன்படுத்த வேளாண்துறை ஆலோசனை
ADDED : அக் 10, 2024 06:08 AM
கள்ளக்குறிச்சி: விவசாயிகள் பயிர் சாகுபடிக்கு டி.ஏ.பி., உரத்திற்கு மாற்றாக சூப்பர் பாஸ்பேட் உரம், காம்ப்ளக்ஸ் உரங்களை பயன்படுத்த வேளாண் துறை அலுவலர் ஆலோசனை வழங்கி உள்ளார்.
விவசாயிகள் பயிர் சாகுபடிக்கு டி.ஏ.பி., உரத்திற்கு மாற்றாக சூப்பர் பாஸ்பேட் உரம், காம்ப்ளக்ஸ் உரங்களை பயன்படுத்தலாம். சூப்பர் பாஸ்பேட் உரத்தில் பயிர்களுக்கு தேவையான பாஸ்பரஸ், சல்பர். கால்சியம் போன்ற கூடுதல் சத்துக்கள் அடங்கியுள்ளன. எண்ணெய்வித்துப் பயிர்களில் அதிக மகசூல் தருகிறது. மேலும் மண்ணில் டி.ஏ.பி., உரம் ஏற்படுத்தும் உப்பு நிலையை விட சூப்பர் பாஸ்பேட் குறைவாகவே ஏற்படுகிறது. எனவே விவசாயிகள் டிஏபி உரத்திற்கு பதிலாக சூப்பர் பாஸ்பேட், காம்ப்ளக்ஸ் உரங்களை பயன்படுத்தலாம்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் தனியார் உர நிறுவன நிலையங்களில் யூரியா 6395 மெட்ரிக் டன், டி.ஏ.பி., 1685 மெட்ரிக் டன், பொட்டாஷ் 1502 மெட்ரிக் டன், சூப்பர் பாஸ்பேட் 1518 மெட்ரிக் டன் மற்றும் காம்ப்ளக்ஸ் 9763 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
விவசாயிகள் பயிர்களுக்கு டி.ஏ.பி., மட்டும் பயன்படுத்தாமல் தழை, மணி, சாம்பல் சத்துக்கள் கொண்ட காம்ப்ளக்ஸ் மற்றும் சூப்பர் பாஸ்பேட் உரங்களை பயன்படுத்தி பயன்பெறலாம். மேலும் தனியார் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு விற்பனை நிலையங்களில் அரசு நிர்ணயித்த விலையில் விற்பனை முனைய கருவி மூலம் விவசாயிகளிடம் ஆதார் விவரங்களை பெற்று விநியோகம் செய்திட வேண்டும் என மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் அசோக்குமார் தெரிவித்துள்ளார்.