/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
டி.ஏ.பி., உரத்திற்கு மாற்றாக சூப்பர் பாஸ்பேட் உரங்கள் வேளாண் அதிகாரி அறிவுறுத்தல்

ADDED : நவ 11, 2024 04:22 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயிகள் பயிர் சாகுபடிக்கு டி.ஏ.பி., உரத்திற்கு மாற்றாக, சூப்பர் பாஸ்பேட் உரங்களை பயன்படுத்த வேண்டும்.
மாவட்ட வேளாண் இணை இயக்குனர் அசோக்குமார் செய்திக்குறிப்பு:
விவசாயிகள் பயிர் சாகுபடிக்கு டி.ஏ.பி., உரத்திற்கு மாற்றாக, சூப்பர் பாஸ்பேட் உரம், காம்ப்ளக்ஸ் உரங்களை பயன்படுத்த வேண்டும். இதில் பயிர்களுக்கு தேவையான பாஸ்பரஸ், சல்பர், கால்சியம் போன்ற கூடுதல் சத்துகள் அடங்கியுள்ளன. எண்ணெய் வித்து பயிர்களில் அதிக மகசூல் தருகிறது.
மேலும் மண்ணில் டி.ஏ.பி., உரம் ஏற்படுத்தும் உப்பு நிலையைவிட சூப்பர் பாஸ்பேட் குறைவாகவே ஏற்படுத்துகிறது. அத்துடன் விவசாயிகள் டி.ஏ.பி., மட்டும் பயன்படுத்தாமல், தழை, மணி, சாம்பல் சத்துக்கள் கொண்ட காம்ப்ளக்ஸ் மற்றும் சூப்பர் பாஸ்பேட் உரங்களை பயன்படுத்தி பயன்பெறலாம்.
தனியார் மற்றும் தொடக்க கூட்டுறவு விற்பனை நிலையங்களில் அரசு நிர்ணயித்த விலையில், விற்பனை முனைய கருவி மூலம் விவசாயிகளிடம் ஆதார் விவரங்களை பெற்று விநியோகம் செய்யப்படுகிறது.
எனவே, பயிர் சாகுபடிக்கு விவசாயிகள் சூப்பர் பாஸ்பேட் உரங்களை பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.